வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 7 நவம்பர் 2020 (11:04 IST)

மாஸ்க் நீங்களே செஞ்சதா....? எப்பவுமே ஒரு மார்க்கமாவே இருக்கீங்களே ஸ்ருதி ஹாசன்...!

உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.

தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு பாப் பாடகர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருப்பவர். அதன் எதிரொலியாக தனது 6 வயதிலே தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் ஸ்ருதி.

சிறிது காலம் கழித்து அம்மணிக்கு பட வாய்ப்பு குறைய ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராக மாறினார். இருந்தும், படவாய்ப்புகள் ஏதுமின்றி வந்த ஸ்ருதிஹாசன் இதற்கிடையில் காதல் வலையில் விழ சில காலம் ஜாலியாக உலா வந்துகொண்டிருந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தங்கள் காதல் முறிந்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்தார்.

எனினும் எந்தவித டென்க்ஷனும் இன்றி சிங்கிள் பெண்ணாக ஜாலியாக சுற்றி வருகிறார். அந்தவகையில் தற்ப்போது காரில் அமர்ந்து டாப் ஆங்கில் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார். இதில் அவர் அணிந்திருக்கும் மாஸ்க் தான் முதலில் ரசிகர்களை அட்ராக்ட் செய்கிறது. ஸ்ருதி நீங்களே செய்தீங்களா இதை? என கேட்டு கமெண்ட் செய்து இந்த funky ஸ்டைல் போஸுக்கு லைக்ஸ் குவித்துள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

BABY’s DAY OUT