மொத்த சப்போர்ட்டும் ஆரிக்கு தான்... கதறி அழுத சம்யுக்தா

Papiksha Joseph| Last Modified வெள்ளி, 6 நவம்பர் 2020 (13:01 IST)

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் அந்த வாரத்தின் சிறப்பாக செயல்பட்டவர் மற்றும் மோசமாக செயல்பட்டவர் குறித்த கருத்துகணிப்பு எடுக்கப்படும் என்பது தெரிந்தது.அந்த வகையில் இந்த வாரம் சிறப்பாக செயல்பட்டவர் என்று ஆரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதில் சனம், அனிதா, ஆஜித், ரமேஷ் ஆகியோர் ஆரியை தேர்வு செய்தனர். கடந்த இரண்டு வாரங்களாக ஆரியை மோசமான போட்டியாளர் என தேர்வு செய்து சிறைக்கு அனுப்பி வைத்த நிலையில் இம்முறை அவர் சிறப்பாக செயல்பட்டவர் என தேர்வு செய்யப்பட்டதை அறிந்த சம்யுக்தா பொறுத்துக்கொள்ளமுடியாமல் அழுகிறார்.

மேலும், போட்டியாளர்கள் எல்லோரும் இப்படி ஒன்று கூடிவிட்டார்களே என ஆதங்கப்பட்டுள்ளார். காரணம், சம்யுக்தா மற்றும் ஆரி இடையே கடுமையான பிரச்சனை நடந்தது. என்னை ஆரி அவ்வளவு insult பண்ணியும் எல்லோரும் அவருக்கு சப்போர்ட் பண்ணிருக்காங்க என்று பொறுத்துக்கொள்ளமுடியாமல் அழுகிறார்.

இதே போன்று சனம் ஷெட்டியை பாலா insult செய்தபோது நீ பாலாவுக்கு முழு சப்போர்ட் பண்ணி அவருக்கு கடைசி வரை சொம்பு தூக்கிக்கின. இப்போ உனக்கு என்றால் வயிறு எரியுதா...? சனத்துக்கு நடந்தப்போ நீ என்ன சாணி அள்ள போயிருந்தியா சம்யுக்தா...? பொண்ணாமே பொண்ணு..!! என ஆளாளுக்கு சம்யுக்தாவை திட்டுவதுடன் ஆரிக்கு முழு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :