வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 8 பிப்ரவரி 2024 (07:17 IST)

கமல்ஹாசன் தயாரிப்பில் ஸ்ருதிஹாசனோடு இணைந்து நடிக்கும் லோகேஷ் கனகராஜ்.. !

தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ருதிஹாசன் முதலில் நடிகையாக அறிமுகமானது இந்தி சினிமாவில்தான். அதன் பின்னர் ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால் ஸ்ருதிஹாசனை தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகை ஆக்கியது. தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் தெலுங்கில் சலார் படத்தில் நடித்திருந்தார். தமிழில் கடைசியாக அவர் லாபம் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் வேறு எந்த தமிழ் படத்திலும் கமிட்டாகவில்லை. இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் ஸ்ருதிஹாசன் எழுதி, இசையமைத்து உருவாக்கியுள்ள புதிய இசை ஆல்பம் பாடல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ்  நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆல்பத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, நேற்று இதன் ஷுட்டிங் சென்னையில் நடந்துள்ளது.