1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (12:48 IST)

தேவதை வம்சம் நீயோ… இணையத்தில் வைரலான மாளவிகாவின் போட்டோஸ்!

ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். கடைசியாக  அவர் நடித்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது.

இதையடுத்து இப்போது அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். நடிப்பில் மாளவிகாவுக்குக் கிடைத்த ரசிகர்களை விட, அவரின் புகைப்படங்கள் மூலமாக கிடைத்த ரசிகர்கள்தான் அதிகம். இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களைக் குவித்து வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் அவர் பகிர்ந்த புகைப்படத்தில் உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியான தோற்றத்துக்கு மாறியுள்ளார். இந்நிலையில் இப்போது ஜிம் உடையில் அவர் வெளியிட்டுள்ள வொர்க் அவுட் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.