செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 30 மார்ச் 2020 (10:07 IST)

கேவலமாகப் பேசிய நபர் – குஷ்புவின் பதிலால் அஜித் ரசிகர்கள் வருத்தம் !

நடிகை குஷ்பூவையும் திரையுலகினரையும் பற்றி அநாகரிகமாகப் பேசிய நபருக்கு அவர் அளித்த பதில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தினப்படி சம்பளம் வாங்கும் சினிமா தொழிலாளர்களுக்கு திரையுலக பிரபலங்கள் நிதியுதவி அளித்து உதவி வருகின்றனர். அந்த வகையில் நடிகை குஷ்பூவும் அவரது கணவர் இயக்குனர் சுந்தர் சி யும் தொழிலாளர்களுக்காக 5 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்து இருந்தனர்.

இது சம்மந்தமான தகவலை குஷ்பு டிவிட்டரில் பகிர, விஜய் தமிழன் (இவர் ஒரு அஜித் ரசிகராம்) என்கிற பெயரில் இருக்கும் ஒருவர் அவரது பகிர்வில் ‘அப்போ தமிழ்நாட்டு மக்களுக்கு எதும் செய்ய மாட்டிங்க, கூத்தாடி கூத்தாடிக்குதான கொடுத்து உதவுவார்கள்’ என அநாகரீகமாக கமெண்ட் செய்தார். இதையடுத்து அவருக்குப் பதிலளிக்கும் விதமாக குஷ்பூ ‘உன்னைப்போன்ற ஒரு நபரை ரசிகர் என சொல்லிக் கொள்வதற்கு அஜித் நிச்சயம் வெட்கப்படுவார்’ எனக் கூறினார்.

குஷ்புவின் இந்த கமெண்டால் சில அஜித் ரசிகர்கள் அவர் அஜித் ரசிகரா என்றே தெரியாத நிலையில் குஷ்புவின் இந்த பதில் தேவையில்லாதது எனக் கூறியுள்ளனர்.