தனிமைப் படுத்தப்பட்ட அஜித் பட நடிகை – ஏன் தெரியுமா?

Last Modified செவ்வாய், 31 மார்ச் 2020 (19:08 IST)

அஜித்தின் நேர்கொண்ட பார்வைப் படத்தில் நடித்த ஸ்ரத்தா ஸ்ரீநாத் விமானப் பயணம் மேற்கொண்டதால் வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தமிழில் விக்ரம் வேதா மற்றும் ரிச்சி ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத். ஆனால் அஜித்தோடு நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்ததின் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார். இந்நிலையில் கொரோனா எச்சரிக்கை அதிகமாகியுள்ள நிலையில் இப்போது தனது வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

மார்ச் 16 ஆம் தேதி அவர் பெங்களூருவில் இருந்து சென்னைக்கும் பின்னர் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கும் அவர் பயணம் மேற்கொண்டதால் அதிகாரிகள் அவரைத் தனிமைப்படுத்திக் கொள்ள சொல்லியுள்ளனர். இதையடுத்து தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்ட நேற்று அவர் சமூகவலைதளத்தில் லைவ்வாக பேசினார்.

ரசிகர்களிடம் பேசிய அவர் வீட்டில் இருப்பது வெறுப்பாக இருப்பதாகவும் அதனால் டிக்டாக்கை டவுன்லோட் செய்து வைத்துள்ளதாகவும் அதை எப்படி பயன்படுத்துவது எனத் தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :