ஒரே படத்தில் 3 படத்துக்கான சம்பளத்தை லவட்டிய நடிகை: சீனியர்ஸ் ஆங்கிரி!!

Last Updated: திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (18:42 IST)
சாஹோ படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கில் அறிமுகமாகும் நடிகை ஷ்ரத்தா கபூர் அதிக அளவு சம்பளம் வாங்கியுள்ளதாக தகவ்ல் வெளியாகியுள்ளது. 
 
பாகுபலி, பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்களால் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் பிரபலம் ஆனவர் நடிகர் பிரபாஸ். இந்த இரண்டு படங்களை அடுத்து பிரபாஸ் நடித்து வந்த சாஹோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அந்த படத்தில் அறிமுகமாகும் நடிகை ஷ்ரத்தா கபூருக்கு ரூ.7 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். ஹிந்தி படங்களில் நடிக்க ரூ.2 கோடி சம்பளம் பெறும் ஷ்ரத்தா கபூர் தனது முதல் படமான சாஹோ படத்திற்கு ரூ.7 கோடி பெற்றுள்ளார். இது தெலுங்கு இண்டஸ்ட்ரியில் உள்ள சீனியர் நடிகைகளை கோபமடைய செய்துள்ளதாம். 
 
இந்தப் படத்தில் பிரபாஸோடு நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், மந்திரா பேடி, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :