அட்லீயின் அடுத்தப்படத்தின் ஹீரோ இந்த பிரம்மாண்ட நடிகர்களா? இதுவும் திருட்டு கதையா ?

Last Updated: செவ்வாய், 25 ஜூன் 2019 (19:34 IST)
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் பட்டியலில்  தற்போது டாப் 5 இடத்தில்  இருப்பவர் தான் இயக்குனர் அட்லீ. இவர் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு ஒரு சில படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் அத்தனையும் வெற்றி படங்கள் தான். குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களின் மன்னனாக திகழும் நடிகர் விஜய்யை வைத்து ஏற்கனவே 2  படங்களை இயக்கிவிட்டார். 


 
தற்போது மீண்டும் நடிகர் விஜய்யை வைத்து 3 வைத்து முறையாக கூட்டணி சேர்ந்து பிகில் படத்தை இயக்கி வருகிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பிகில் படத்தின் மூன்று போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இந்தப் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 


 
இந்நிலையில் பிகில் படத்தை அடுத்து இயக்குனர் அட்லீ அடுத்ததாக இரண்டு பிரமாண்ட நடிகர்களை வைத்து படம் இயக்கப்போவதாக சமீபத்திய தகவல் ஒன்று சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. அந்த வகையில் அட்லீ-பிரபாஸ், அட்லீ-ஷாருக்கான் என இரண்டு நாயகர்களுடன் இவருடைய அடுத்தப்படம் அமையும் என்ற தகவல் தற்போது கிசுகிசுக்கப்படுகின்றது.


 
இதனை அறிந்த நெட்டிசன்ஸ்  அது சரி இதுவும் திருட்டு கதைதானா என கிண்டலடிக்க துவங்கிவிட்டனர். 


இதில் மேலும் படிக்கவும் :