நேர்கொண்ட பார்வை: ஏப்ரல் இறுதி வரை நோ பிரேக்!

Last Modified செவ்வாய், 12 மார்ச் 2019 (06:45 IST)
தல அஜித்தின் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கி வரும் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
முதலில் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பை முடிக்க இயக்குனர் எச்.வினோத் திட்டமிட்டுள்ளார். அதுமட்டுமின்றி இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் இறுதி வரை தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

விஸ்வாசம் படம் போலவே இந்த படத்திலும் ஒரு 'மழை ஃபைட்' இருப்பதாகவும், இதன் படப்பிடிப்பு கடந்த வாரம் முழுவதும் நடந்ததாகவும், இந்த சண்டைக்காட்சி படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.
வரும் ஜூன் அல்லது ஜூலையில் வெளியாகவுள்ள இந்த படத்தில் அஜித், வித்யாபாலன், ஷராதாஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தரங், அஸ்வின் ராவ், சுஜித் உள்பட பலர் நடித்து வருகின்றனர். போனிகபூர் தயாரித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறர்.இதில் மேலும் படிக்கவும் :