மைனஸ் 15 டிகிரியில் படப்பிடிப்பு: அருண்விஜய்யின் அர்ப்பணிப்பு
அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆன நடிகர் அருண்விஜய் அதன்பின்னர் தனியாகவும் பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது அவர் ’அக்னி சிறகுகள்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பில் பகுதியில் மைனஸ் 15 டிகிரி குளிர் இருந்த போதிலும் அதை பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் அருண் விஜய் நடித்தது படக்குழுவினர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது
அருண்விஜய் மட்டுமின்றி அவருடன் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த குளிரையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பிற்கு உதவினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது விஜய் ஆண்டனி , அருண்விஜய் அக்ஷராஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை மூடர்கூடம் நவீன இயக்கி வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது