திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (07:41 IST)

அஜித்துடன் இணைந்து நடிக்க நீண்ட நாள் ஆசை- கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் சிவராஜ்குமார். மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகனான இவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் கன்னட மொழியில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். அவர் வரும் காட்சிகள் தமிழ் சினிமா ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவிலும் ஜெயிலர் திரைப்படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

இந்நிலையில் இப்போது பேசியுள்ள சிவராஜ்குமார் தமிழில் அஜித்தோடு இணைந்து நடிக்க நீண்ட நாள் ஆசையோடு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அஜித்தின் எளிமை தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். சிவராஜ் குமார் நடித்துள்ள கோஸ்ட் திரைப்படம் அக்டோபர் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.