வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (11:28 IST)

நான் அவள் இல்லை... போலி கணக்கால் புலம்பும் ஷிவானி!!

ஷிவானி நாராயணன் தனக்கு டிவிட்டர் கணக்கு இல்லை என ரசிகர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார். 
 
விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார். 
 
இப்போது ஊரடங்கு சமயத்தில் அம்மணி தினமும் தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் போட்டு இளைஞர்கள் மனதில் குடிகொண்டுள்ளார். தற்போது அவர், கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொள்ள இருக்கிறார். இதற்காக இவர் ஹோட்டலில் தனிமைப்படுத்த பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக நான் டிவிட்டர் பக்கத்தில் இல்லை. என் பெயரில் உள்ள போலி கணக்கை நம்பாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.