செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 1 அக்டோபர் 2018 (14:56 IST)

கிளம்பிட்டாளே விஜயலட்சுமி! இன்று சிங்கிள் டிராக் வெளியீடு

தனது நடிப்பில் நவரசத்தையும் வெளிப்படுத்துபவர் ஜோதிகா. திருமணத்துக்கு பின் சில வருடங்கள் அமைதியாக இருந்தவர், பின்னர் `நாச்சியார்', செக்க சிவந்த  வானம் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய ரோலில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
நடிகை ஜோதிகா காற்றின் மொழி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை போப்டா நிறுவனம் சார்பில் தனஞ்செயன், விக்ரம்குமார் தயாரித்துள்ளனர். ராதாமோகன் இயக்கியுள்ளார். சமீபத்தில் காற்றின் மொழி டீசர் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றது. அந்த டீசரில் ரேடியோ ஆர்ஜே ஆக  ஆசைப்படுகிறார் ஜோதிகா. அது தான் படத்தின் கதையாக இருக்கும் என தெரிகிறது. விஜயலட்சுமி என்ற கேரக்டரில் ஜோதிகா நடித்துள்ளார்.
 
இந்நிலையில் கிளம்பிட்டாலே விஜயலட்சுமி என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. குஷ்பு சுந்தர் இந்த பாடலை வெளியிடுகிறார். மதன்  கார்க்கி இந்த பாடலை எழுதியுள்ளார். ஏ.ஹெச். ஹாஷிப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.  மகேஷ் முத்துச்சாமி ஒளிப்பதிவு செய்யுள்ளார்.
 
காற்றின் மொழிபடத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடிக்கிறார். இந்தியில் நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார். 
 
இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `தும்ஹரி சூளு' படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி உள்ளது.