வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 19 செப்டம்பர் 2018 (11:13 IST)

நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியந்து பாராட்டிய ஜோதிகா!

நயன்தாராவின் வளர்ச்சி குறித்து ஜோதிகா வியந்து கூறியதாவது: தனக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைச்சிக்காங்க நயன்தாரா. ஒரு பெண்ணாக தொடர்ந்து அவங்க ஜெயித்து வற்றாங்க.

எந்த நேரமும் இன்னும் கூடுதலாக முயற்சிகள் எடுக்க வேண்டும் என்ற உணர்வுடன் இருக்காங்க. அது ஈஸியான வி‌ஷயம் இல்லைங்க. ஹீரோக்களை முதன்மைப்படுத்தாத படங்களில் நடிக்கிறாங்க.
 
ஒரே நாளில் பல காட்சிகளில் நடித்து குறிப்பிட்ட டைமுக்குள்ள படத்தை முடிச்சு கொடுக்குறாங்க. இது ரெம்பவே கஷ்டமான விஷயம். நடிக்கிறது பெரிய கலையாக இருந்தாலும் பல தடைகளை தாண்டி குறிப்பிட்ட டைம் மற்றும் பட்ஜெட்டுக்குள் படத்தை முடித்து கொடுக்கும் நயன்தாராவை பார்த்தால் எனக்கு   ஆச்சரியமாக இருக்கிறது. 
 
இவ்வாறு ஜோதிகா கூறியுள்ளார்.