பில்லியன் டாலர் கிளப்பில் இணைந்த முதல் பெண் இயக்குனர் இவர்தான்!
இயக்குனர் கிரீட்டா கெர்விக் இயக்கிய பார்பி படம் உலகம் முழுவதும் 1 பில்லியர் டாலருக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
ஹாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குனர் கிரீட்டா கெர்விக். இவர், இயக்கத்தில் கடந்த ஜூலை 21 ஆம் தேதி வெளியான படம் பார்பி. இப்படத்தை வார்னர் பிரதமர் மற்றும் வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் வெளியிட்டது.
இப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் 1.052 பில்லியன் டாலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
உலகச் சினிமா வரலாற்றில் ஒரு பெண் இயக்குனர் இயக்கிய திரைப்படம் பில்லியன் டாலர்களை கடந்து வசூல் சாதனை படைத்துள்ளது இதுவே முதல்முறை என்பதால் கிரேட்டா ஜெர்விக்கிற்கு பாராட்டுக்ள் குவிந்து வரருகிறது.
இந்த பில்லியன் டாலர் கிளப்பில் இணைந்த 29 வது இயக்குனர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.