வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: சனி, 18 நவம்பர் 2017 (17:38 IST)

நேபாளத்துக்குப் போகும் சாய் பல்லவி

தெலுங்குப் படத்தின் படப்பிடிப்புக்காக நேபாளம் செல்ல இருக்கிறார் சாய் பல்லவி.





‘பிரேமம்’ படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான சாய் பல்லவி, அந்த ஒரு படத்திலேயே மலர் டீச்சராக எல்லோர் மனதிலும் இடம்பிடித்து விட்டார். அவர் தெலுங்கில் அறிமுகமான ‘பிடா’ படமும் சூப்பர் ஹிட். தற்போது நானி ஜோடியாக ‘எம்சிஏ’ தெலுங்குப் படத்தில் நடித்துவரும் சாய் பல்லவி, தமிழில் விஜய் இயக்கும் ‘கரு’ படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். அத்துடன், தனுஷ் ஜோடியாக ‘மாரி 2’ படத்திலும் நடிக்கிறார்.

இந்நிலையில், சர்வானந்த் ஜோடியாக ‘ஹனு ரகவாபுடி’ படத்தில் கமிட்டாகியிருக்கிறார் சாய் பல்லவி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் நடக்க இருக்கிறது. எனவே, விரைவில் நேபாளம் செல்ல இருக்கிறார் சாய் பல்லவி.