வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (11:09 IST)

தனுஷுக்கு ஜோடியான ‘பிரேமம்’ ஹீரோயின்

‘பிரேமம்’ பட புகழ் சாய் பல்லவி, தனுஷுக்கு ஜோடியாக தமிழில் நடிக்கிறார்.


 

 
பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘மாரி’. 2015ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார். ரோபோ சங்கர் காமெடியனாகவும், விஜய் யேசுதாஸ் வில்லனாகவும் நடித்திருந்தனர்.  ஹிட்டான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருவதாக அறிவித்தனர். ஆனால், ஹீரோயின் யார் என்பதை சஸ்பென்ஸாகவே வைத்திருந்தனர். ஆனால், தற்போது அந்த ஹீரோயின் யார் என்பது தெரிந்துவிட்டது. ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவிதான் அது.

“இந்தப் படத்தில் ஹீரோயின் கேரக்டர் வித்தியாசமாக இருக்கும். கதையின் இதயமாக ஹீரோயின் இருப்பார். கதையோடு ஒன்றி நடிக்கக் கூடிய நடிகைதான் இந்த கேரக்டரில் நடிக்க முடியும். சாய் பல்லவி அதற்குப் பொருத்தமாக இருப்பார். கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் சாய் பல்லவி, இந்தப் படத்தின் முழுக்கதையையும் கேட்டபிறகு உடனே ஓகே சொல்லிவிட்டார். அந்தளவுக்கு கதை அவரை ஈர்த்துவிட்டது” என்கிறார் பாலாஜி மோகன்.