1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 8 நவம்பர் 2017 (12:00 IST)

நடிக்கும் படங்களுக்கு தானே டப்பிங் பேசும் பிரபல நடிகை

பிரேமம் படத்தில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. ஒரே படத்தில் ஒட்டுமொத்த மலையாள மற்றும் தமிழ்  ரசிகர்களையும் கவர்ந்தார்.

 
‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி கரு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் ‘பிடா’ படத்தில் அறிமுகமானார். அந்த படமும் அவருக்கு பெரிய பெயரை வாங்கிக்கொடுத்தது. இதனால் தற்போது தெலுங்கு மட்டுமின்றி, தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார் சாய் பல்லவி.
 
இந்நிலையில், தெலுங்கில் அவர் நடித்துள்ள இரண்டாவது படம் எம்சிஏ. இந்த படத்தில் நடிகர் நானி நாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வரும் நிலையில், தனக்குத்தானே டப்பிங் பேசி அனைவரையும்  ஆச்சர்யப்படுத்தியுள்ளார் நடிகை சாய் பல்லவி, இப்போது இன்னும் நன்றாக தெலுங்கு பேச கற்றுக்கொண்டு சரளமாக  தங்குதடையின்றி டப்பிங் பேசிக்கொண்டிருக்கிறாராம்.
 
தமிழில் நடிக்கும் படங்களூக்கும் டப்பிங் பேசச் சொல்லியிருக்கிறாராம் இயக்குநர். சாய் பல்லவியும் அதற்கு  சம்மதித்துவிட்டாராம்.