கன்னட படத்தின் ரீமேக்கில் சாந்தனு பாக்யராஜ்… வெளியான அறிவிப்பு!
நடிகர் சாந்தனு பாக்யராஜ் மதியாளன் என்ற க்ரைம் த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
நடிகர் சாந்தனு பாக்யராஜ் சினிமாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் சரியான வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை. சமிபத்தில் வெளியான பாவக்கதைகள் ஆந்தாலஜியில் அவரின் கதாபாத்திரம் கவனத்தைப் பெற்றது. இதையடுத்து இப்போது அவருக்கான வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. தற்போது முருங்கைக்காய் சிப்ஸ், மற்றும் ராவணக்கோட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதையடுத்து கன்னடத்தில் சீனிவாஸ் இயக்கி நடித்த பீர்பால் என்ற துப்பறியும் கதையின் தமிழ் ரீமேக்கான மதியாளன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை இயக்குனர் கிருஷ் இயக்க உள்ளார். கொரோனா லாக்டவுன் முடிந்ததும் இந்த படத்துக்கான படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன.