1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 11 ஜூலை 2023 (20:33 IST)

சிவகார்த்திகேயனுக்கு குரல் கொடுத்த விஜய்சேதுபதி!

maaveeran
மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில்,  சிவகார்த்திகேயன் நடிப்பில்  உருவாகியுள்ள  படம் மாவீரன். இவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ள நிலையில், வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார்.

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில்  அருண் விஷவா தயாரித்துள்ள இப்படம் வரும்  ஜூலை 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. 

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தைத் தமிழில் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்த நிலையில், படத்தில் சிவகார்த்திகேயன்  வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளதாக சமீபத்தில் படக்குழு கூறியது. அதன்படி, இப்படத்தில் சிவகார்த்திகேயன் காதில் அசரீரி கேட்கும் என்றும், இதை  நடிகர் விஜய்சேதுபதி பேசியுள்ளதாக தகவல் வெளியானது.

இதை உறுதிப்படுத்தும் வகையில்,  நடிகர் சிவகார்த்திகேயன் தன் டிடுவிட்டர் பக்கத்தில், ‘’மாவீரனின் உங்கள் குரலோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி’’ என்று டுவீட் பதிவிட்டு ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது.