1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 5 ஆகஸ்ட் 2023 (09:23 IST)

இயக்குனர் ஷங்கரை கௌரவித்த இயக்குனர்கள்… வைரல் ஆகும் புகைப்படம்!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ஜென்டில்மேன் கடந்த 1993 ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி வெளியான நிலையில் இன்றுடன் அந்த படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனை அடுத்து ஷங்கர் தனது உதவியாளர்களுடன் கேக் விட்டு கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட அது வைரல் ஆனது.

இந்நிலையில் இப்போது 30 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குனர் ஷங்கருக்கு, மணிரத்னம் தன்னுடைய வீட்டில் விருந்து கொடுத்து கௌரவித்துள்ளார். இதில் பிரபல இயக்குனர்களான லோகேஷ், லிங்குசாமி, சசி, கௌதம் மேனன், கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள இயக்குனர் ஷங்கர் “இந்த தருணம்தான் நான் சம்பாதித்துள்ள செல்வம் என்று நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.