கார்த்தியின் சூப்பர் ஹிட் படத்தின் 2 வது பாகம்....இவர்தான் இசையமைப்பாளர்
கார்த்தி நடிப்பில் சர்தார் 2 படம் ஷூட்டிங் தொடங்கப்படவுள்ளது.
நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கி கடந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி வெளியான திரைப்படம் சர்தார். இந்த படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என படக்குழுவினர் அறிவித்தனர்.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படத்தின் 2 வது பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், இந்த சர்தார் 2வது பாகம் பற்றிய பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, விரைவில் சர்தார் 2 வது பாகம் ஷூட்டிங் தொடங்கப்படவுள்ளது. இப்படத்தை பிஎஸ்.மித்ரன் இயக்க, கார்த்தி நடிக்கவுள்ள நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். பருத்திவீரன், நான் மகான் அல்ல, பையா , விருமன் படங்களுக்குப் பிரகு கார்த்தி, யுவன் கூட்டணி மீண்டும் இணைகிறது.
இப்படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.