1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 7 மே 2021 (13:43 IST)

நான் இறுதிவரை கமல் கட்சியில் தான் இருப்பேன்: சந்தோஷ் பாபு

நான் இறுதிவரை கமல் கட்சியில் தான் இருப்பேன்: சந்தோஷ் பாபு
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நேற்று கூண்டோடு பல நிர்வாகிகள் ராஜினாமா செய்ததாக வெளியான தகவலை அடுத்து தற்போது இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய பிரமுகருமான சந்தோஷ் பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது
 
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கட்சியை விட்டு வெளியேறி விட்டதாகத் தவறான தகவல் பரவி வருகிறது.
 
தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தங்களின் ராஜினாமா கடிதங்களைக் கட்சியின் தலைவர் கமல்ஹாசனிடம் கொடுத்தனர். தேர்தல் காலச் செயல்பாடுகளைக் காய்தல் உவத்தல் இன்றி ஆய்வு செய்து கட்சியை மறுகட்டமைப்பு செய்வதற்கு ஏதுவாக இருக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட கடிதங்கள் கமலின் பரிசீலனையில் இருக்கின்றன.
 
கட்சியின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் ஆர்.மகேந்திரன் மட்டுமே கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் கட்டமைப்பில் செய்யப்படும் மாற்றங்கள், புதிய பொறுப்பாளர்கள் குறித்த விவரங்கள் விரைவில் முறையாக அறிவிக்கப்படும்.