அந்த வேலை மட்டும் இங்க கூடாது… ஷங்கருக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தெலுங்கு தயாரிப்பாளர்!
இயக்குனர் ஷங்கர் இப்போது ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்க உள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக கியாரா அத்வானி சில வாரங்களுக்கு முன்னர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் இப்போது மற்றொரு கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ராம் சரண் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வேலைகளை இப்போது இயக்குனர் ஷங்கர் தொடங்கியுள்ளார்.
வழக்கமாக ஷங்கர் தனது படங்களை ஆண்டுக்கணக்கில் இழுத்து மிகப்பொறுமையாக வேலை செய்வார். ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் அதற்கு தடா போட்டுள்ளாராம். அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் படத்தை முடித்து தன்னிடம் கொடுத்து விடவேண்டுமெனக் கூறி அதற்கு ஷங்கரையும் ஒப்புக்கொள்ள வைத்துள்ளாராம்.