பொன்ராம் படத்துக்கு சென்ற விஜய் சேதுபதி… போற வழியில் செய்த காரியம்!
நடிகர் விஜய் சேதுபதி இப்போது இயக்குனர் பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் விஜய் சேதுபதி வசம் தற்போது 20 படங்களுக்கு மேல் கைவசம் உள்ளது. அவற்றில் 10க்கும் மேற்பட்ட படங்கள் முடிந்து ரிலிஸுக்கு தயாராக உள்ளன. சில படங்கள் ஓடிடி ரிலீஸூக்கு முயற்சி செய்து வருகின்றன. இவை இல்லாமல் இப்போது மாஸ்டர் செஃப் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் அவர் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் இப்போது தேனியில் நடக்கும் இயக்குனர் பொன்ராம் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புக்கு முன்னர் மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் அவர் நடித்துக் கொடுத்துள்ளாராம். அந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடந்த நிலையில் அதை முடித்துவிட்டுதான் பொன்ராம் படத்தின் படப்பிடிப்புக்கு சென்றுள்ளாராம்.