ஷாலினி பாண்டேவுக்கு இவ்வளவு டிமண்ட்டா? அட்டைப்படத்துக்கு வாங்கிய தொகை!

Last Modified சனி, 24 ஜூலை 2021 (16:53 IST)

நடிகை ஷாலினி பாண்டே ஊடகங்களின்
அட்டைப்படத்துக்காக தனது புகைப்படத்தை விற்பதன் மூலம் நல்ல தொகை பெற்று வருகிறாராம்.


அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே. இவரை ’அக்னி சிறகுகள்’ என்ற படத்தில் நடிக்க தயாரிப்பாளர் டி.சிவா ஒப்பந்தம் செய்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் ஷூட்டிங்கில் நடித்து வந்தவர் திடீரென இந்தி பட வாய்ப்பு கிடைத்ததால் படத்திலிருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆனால் இப்போது அவர் தனது ஸ்டைலானப் புகைப்படங்களை முன்னணி பத்திரிக்கைகளின் அட்டைப்படத்துக்குக் கொடுக்க 5 லட்சம் ரூபாய் வரை பெற்று சம்பாதித்து வருவதாக சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :