திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 24 ஜூலை 2021 (15:36 IST)

கமலுடன் பகத் பாசில் செல்ஃபி: விக்ரம் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பஹத் பாசிலுக்கு மலையாள மொழி தாண்டியும் ரசிகர்கள் ஏராளம். அவரின் படங்கள் தமிழகத்திலும் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகின்றன. செலக்ட்டிவான படங்களில் அழுத்தமான கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் பகத் பாசிலின் நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
 
தற்போது கமல் ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். ‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து  லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குகிறார். இதில் மல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய முன்னணி ரோல்களில் நடிக்கின்றனர். 
 
தற்போது பகத் பாசில் மற்றும் கமலின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங்கில் பகத் பாசில் கலந்துக்கொண்டுள்ளார். அவர் கமலுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு இதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார், கமலின் தீவிர ரசிகனான பகத் பாசில் பேட்டி ஒன்றில், நான் கமல் சாரை பார்த்து இப்படி நடிக்க உங்களால் மட்டும் எப்படி முடிகிறது? என கேட்கவேண்டும் என்று கேட்டது குறிப்பிடத்தக்கது. அநேகமா அதை கேட்டுவிட்டு தான் இந்த செல்ஃபி எடுத்திருப்பார் போல...