செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2017 (22:10 IST)

'தல' மனைவி பரிமாற, 'தளபதி' மனைவி சாப்பிட!!! வைரலாகும் புகைப்படம்

தல அஜித், மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவரும் தொழில்முறையில் போட்டியாளர்களாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது இருவருக்கும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.



 


இந்நிலையில் விஜய், அஜித் மட்டுமின்றி விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் அஜித்தின் மனைவி ஷாலினி ஆகியோரும் நெருங்கிய தோழிகள் என்பது பலருக்கு தெரியாது. இருவரும் பொது இடங்களிலும், தனிப்பட்ட முறையிலும் வழக்கமாக  சந்தித்து பேசி வருவதாகவும், பொது நிகழ்ச்சிகளில் இருவரும் கலந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஷாலினி-சங்கீதா நட்பை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.  இந்த புகைப்படத்தில் அஜித்தின் மனைவியான ஷாலினி, விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு உணவு பரிமாறுவது போன்ற காட்சி ஒன்று உள்ளது. இந்த புகைப்படம் எப்போது, எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும் அஜித், விஜய் ரசிகர்கள் ஃபேஸ்புக், டுவிட்டரில் சண்டை போடாமல் போட்டி போட்டு கொண்டு ஷேர் செய்து வருகின்றனர்.