திங்கள், 25 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 31 ஜூலை 2024 (07:49 IST)

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் ஷாருக் கான்… என்ன பிரச்சனை?

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக ஷாருக் கான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜொலித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து அவர் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டது வேறு அவரை மனதளவில் பாதித்தது.

இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார். இதையடுத்து 2023 ஆம் ஆண்டில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹிட்டடித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தன. இந்நிலையில் அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய டன்கி திரைப்படமும் வெளியாகி 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

இந்த ஆண்டு அவர் நடிப்பில் எந்த படமும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் ஷாருக் கான் கண் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக அவர் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அங்கு சிகிச்சை மேற்கொள்ளாததால் இப்போது அவர் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.