புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 10 ஜனவரி 2023 (16:40 IST)

ஜெய்ஹிந்த் சொன்ன ஷாருக்… சர்ச்சைகளை தவிர்த்த பதான் டிரைலர்!

ஷாரூக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் நடித்து தயாராகியுள்ள படம் ‘பதான்’. இந்த படம் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் பாடல்களால் சமீபத்தில் சர்ச்சை ஏற்பட்டது.

ஆனால் இந்த படம் நாட்டு பற்றை பற்றிய படம் என ஷாரூக்கான் உறுதியாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது பதான் படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஒரு தீவிரவாத அமைப்பு இந்தியாவை அழிக்க புதிய ஆயுதத்தை தயாரிக்கிறது. அதை ஷாருக், தீபிகா படுகோன் ஆகியோர் அடங்கிய குழு தடுப்பதைதான் படமாக எடுத்துள்ளதாக தோன்றுகிறது.

இதுவரை பதான் படத்துக்கு எதிர்ப்புகள் நிலவி வந்த நிலையில் அதை தவிர்க்கும் விதமாக புத்திசாலித்தனமாக ட்ரைலர் கட் செய்யப்பட்டுள்ளதாக பலரும் கருத்துகளையும் கூறி வருகின்றனர். மேலும் டிரைலரில் ஷாருக் கான் “ஜெய்ஹிந்த்” என்று கூறுவதும், இதுவரை எதிர்ப்பு தெரிவித்து வந்தவர்களை அமைதியாக்கியுள்ளது எனக் கூறப்படுகிறது. மொத்தத்தில் சர்ச்சைகளை தவிர்க்கும் விதமாக இந்த டிரைலர் வெளியாகியுள்ளது.