1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 ஜனவரி 2023 (11:38 IST)

பதான் தமிழ் ட்ரெய்லர் வெளியானது! – வாழ்த்து தெரிவித்த விஜய்!

pathan -shah rukh khan
ஷாரூக்கான் நடிப்பில் இந்தி, தமிழில் வெளியாகும் பதான் படத்தின் தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ஷாரூக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் நடித்து தயாராகியுள்ள படம் ‘பதான்’. இந்த படம் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் பாடல்களால் சமீபத்தில் சர்ச்சை ஏற்பட்டது.

ஆனால் இந்த படம் நாட்டு பற்றை பற்றிய படம் என ஷாரூக்கான் உறுதியாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது பதான் படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஒரு தீவிரவாத அமைப்பு இந்தியாவை அழிக்க புதிய ஆயுதத்தை தயாரிக்கிறது. அந்த சமயம் வரை வனவாசத்தில் இருந்த பதான் உள்ளே நுழைகிறான். அந்த தீவிரவாத கும்பலுக்கும், பதானுக்கும் இடையே நடக்கும் மோதலில் எப்படி அவன் நாட்டை காப்பாற்றுகிறான் என்பது ஆக்‌ஷன் ப்ளாக் கதைகளம்.

ட்ரெய்லரில் ‘உண்மையான சோல்ஜர் நாடு என்ன பண்ணுச்சுன்னு கேட்க மாட்டான். நாட்டுக்கு நாம என்ன பண்ணோம்னுதான் யோசிப்பான்’ என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. தமிழில் வெளியாகியுள்ள இந்த ட்ரெய்லரை தனது ட்விட்டரில் பதிவிட்டு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Edit By Prasanth.K