1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (13:46 IST)

#SRK39Million ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்: பிரதமர் மோடிக்கு பிறகு ஷாரூக் தான்!

இந்திய அதிக ட்விட்டர் ஃபாலோவர்களை பெற்று புதிய சாதனை படைத்திருக்கிறார் இந்தி நடிகர் ஷாரூக் கான்.

இந்திய அளவில் மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர் இந்தி நடிகர் ஷாரூக் கான். கடந்த ஆண்டு அதிக ட்விட்டர் ஃபாலோவர்களை கொண்ட இந்தியர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தார் ஷாரூக் கான். முதலிடத்தில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும், இரண்டாம் இடத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் இருந்தார்கள்.

சமீபத்தில் ஷாரூக்கானிடம் ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி கேட்கும் வகையில் #AskSRK என்ற ஹேஷ்டேக் பிரபலம் ஆனது. அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஷாரூக்கான் பதிலளித்திருந்தார். சமீப காலமாக ஷாரூக்கானை ட்விட்டரில் பின்தொடர்பவர்கள் அதிகரித்தி வந்தனர். இந்நிலையில் தற்போது 39 மில்லியன் ஃபாலோவர்களை பெற்று ட்விட்டரில் இந்தியர்கள் அதிகம் பின் தொடரும் பிரபலங்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார் ஷாரூக் கான்.

இதை அவரது ரசிகர்கள் #SRK39Nillion என்ற ஹேஷ்டேகை பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர். இந்திய அளவில் ட்ரெண்டிங் ஹேஷ்டேகுகளில் இது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் 50.7 மில்லியன் ஃபாலோவர்களை பெற்று பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார்.