செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 12 அக்டோபர் 2019 (17:24 IST)

திரும்ப போகாதீங்க மோடி! ட்விட்டரில் ட்ரெண்டான ஹேஷ்டேக்!

இரண்டாவது உச்சி மாநாட்டிற்காக தமிழகம் வந்த பிரதமரை திரும்ப போக வேண்டாம் என கூறி பலர் பதிவிட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு முறை பிரதமர் மோடி தமிழகம் வரும்போதும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேகை பலர் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் இம்முறை #DontGoBackModi என்ற ஹேஷ்டேக் இணையத்தில் பரவலாக ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இரண்டாவது உச்சி மாநாட்டிற்கு மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடி வெள்ளை வேஷ்டி, சட்டை அணிந்து தமிழர் மரபில் வந்து பலரை ஆச்சர்யப்படுத்தினார். மேலும் சீன அதிபருடன் பேசிய போதும் தமிழிலேயே பேசினார். ஏற்கனவே உலக நாடுகள் பலவற்றிற்கு செல்லும்போதும் முதலில் தமிழில் பேசி தனது உரையை தொடங்குவதையே வழக்கமாக தொடர்ந்து வருகிறார் பிரதமர். இதனால் தமிழக மக்களுக்கு அவர்மீது ஒரு பெரும் மதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதனால் வழக்கமாக கோ பேக் மோடியை ட்ரெண்ட் செய்யும் மக்கள் முதன்முறையாக ‘திரும்ப செல்லாதீர்கள் மோடி” என்று இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இரண்டு நாள் பயணம் முடிந்து இன்று மாலை சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி.