செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 19 டிசம்பர் 2023 (09:38 IST)

ஷாருக் கானின் டன்கி திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் பிரபல விநியோக நிறுவனம்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார்.

இதையடுத்து 2023 ஆம் ஆண்டில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹிட்டடித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தன. இந்நிலையில் அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் டன்கி திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 21 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கபப்ட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை தமிழ்நாட்டில் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பாக சக்தி வேல் வெளியிடுகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜவான் மற்றும் பதான் படங்களுக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்புக் கிடைத்த நிலையில் டன்கி படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.