ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் மறுப்பு
பாலிவுட் சூப்பர் ஸ்டார் மகன் ஆர்யன் கானுக்கு போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
நேற்று மும்பையில் உள்ள சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் 13 பேர்களில் ஒருவராக கைதாகியுள்ள பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் சார்யான்கான் இ தற்போது மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அக்டோபர் 1 வரை அவரைக் கால்வலில் எடுத்து விவசாரிக்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுளது.
இந்நிலையில், போதைப்பொருள் பயன்பாடு விவகாரத்தில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேரை அக்டோபர் 7 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.