1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 23 ஜனவரி 2020 (08:28 IST)

உங்கள் வீட்டின் வாடகை எவ்வளவு ? ஷாருக் கானிடம் ரசிகர் கேள்வி !

டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த நடிகர் ஷாருக் கானிடம் ரசிகர் ஒருவர் வித்தியாசமான கேள்வியை கேட்டுள்ளார்.

பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக் கான் கடந்த ஒரு வருடமாக எந்த ஒரு படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் உள்ளார். அதற்கு அவரது முந்தையப் படமான ஜீரோவின் தோல்வியே காரணம் என சொல்லப்படுகிறது. தற்போது அவர் அட்லி இயக்கத்தில் நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ரசிகர்களுடனான தொடர்பு விடுபட்டு விடக்கூடாது என நினைக்கும் அவர் அவ்வப்போது சமூக வலைதளங்களின் மூலம் ரசிகர்களோடு உரையாடி வருகிறார். சமீபத்தில் அதுபோல ரசிகர்களின் 20 கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில் ஒரு ரசிகர் வித்தியாசமான கேள்வி ஒன்றை அவரிடம் எழுப்பி இருந்தார். ஷாருக்கிடம் ‘நான் உங்கள் வீட்டின் அறை ஒன்றை வாடகை எடுக்க எவ்வளவு செலவாகும் ?’ எனக் கேட்டிருந்தார்.

அதில் ‘அதற்காக நீங்கள் 30 வருடம் கடுமையாக உழைக்கவேண்டும்.’ எனத் தனது திரையுலக உழைப்பைக் குறித்து சொல்லியுள்ளார்.