1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 22 ஜனவரி 2020 (06:58 IST)

நடிகைக்காக 5 நாட்கள் ரோட்டில் படுத்து தூங்கிய ரசிகர்

ஒரு நடிகையை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் மும்பை சென்ற ரசிகர் ஒருவர் அவரை சந்திக்க முடியாமல் 5 நாட்கள் ரோட்டில் படுத்து இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ’முகமூடி’ என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ஒரு சில தெலுங்கு ஹிந்தி படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை பூஜா ஹெக்டே. இவருடைய தீவிரமான ரசிகர் பாஸ்கர் ராவ் என்பவர் இவரை சந்திப்பதற்காக மும்பை சென்றுள்ளார்
 
ஆனால் மும்பையில் அவரை சந்திக்க முடியாததால் 5 நாட்கள் தங்குவதற்கு கூட இடமில்லாமல் சாலை ஓரத்தில் தங்கி அவரை சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை ஒரு பத்திரிக்கை செய்தி மூலம் அறிந்த பூஜா ஹெக்டே அவரை நேரில் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் 
 
மேலும் இதுபோன்று சாலையில் படுத்து தூங்கக் கூடாது என்றும் வீட்டிற்குப் போய் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார் பூஜாவின் இந்த செயல் அனைவரையும் பாராட்டும் வகையில் உள்ளது