திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (16:30 IST)

கேரள தொழிலதிபரை 2வது திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகர்.. முதல் கணவர் யார்?

பிரபல சீரியல் நடிகை கேரளா தொழிலதிபரை இரண்டாவது ஆக திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

’நீதானே என் பொன் வசந்தம்’ என்ற சீரியல் மூலம் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமானவர் நடிகை சுபிக்ஷா. இவர் சில திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடன இயக்குனர் மானஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஏற்கனவே மானஸ், நடிகை ஆல்யா மானசாவை காதலித்த நிலையில் அந்த காதல் முறிந்ததால் சுபிக்ஷாவை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் மானஸ் - சுபிக்ஷா திருமணம் நீண்ட நாள் நீண்ட நாள் நீடிக்கவில்லை என்பதும் திருமணம் ஆன சில வருடங்களில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சுபிக்ஷா, அவினாஷ் வாசுதேவன் என்பவரை நேற்று திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva