திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 25 செப்டம்பர் 2022 (18:48 IST)

ஒரே ஒரு தவறான ஆப் டவுன்லோடு: கண்ணீரில் சீரியல் நடிகை

lakhsmi vasudevan
ஒரே ஒரு தவறான ஆப் டவுன்லோடு: கண்ணீரில் சீரியல் நடிகை
ஒரே ஒரு தவறான ஆப் டவுன்லோட் செய்ததால் தான் மிகவும் சிக்கல் இருப்பதாக சீரியல் நடிகை ஒருவர் கண்ணீருடன் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 
 
சரவணன் மீனாட்சி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி உள்பட பல சீரியல்களில் நடித்தவர் நடிகை லட்சுமி வாசுதேவன். இவர் தனது மொபைலில் தவறான ஆப் ஒன்றை டவுன்லோட் செய்து விட்டதால் அவருடைய புகைப்படங்கள் அனைத்தும் மார்பிங் செய்யப்பட்டதாகவும் அந்த புகைப்படங்கள் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார் 
 
தான் 5 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும் அந்தக் கடனை கட்டாவிட்டால் அனைவருக்கும் அந்த புகைப்படங்களை அனுப்புவோம் என்று தான் மிரட்டப்படுவதாகவும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்
 
இதனை அடுத்து அவர் சைபர் க்ரைமில் புகார் அளித்து உள்ளார் என்பதும் இந்த புகார் குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இதுகுறித்து நடிகை லட்சுமி வாசுதேவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது