திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : திங்கள், 17 ஏப்ரல் 2023 (16:39 IST)

தயாரிப்பாளர் சொகுசு கார் வாங்கிக் கொடுத்தாரா?- பதிலளித்த பூஜா ஹெக்டே!

தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது பீஸ்ட் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இந்த படத்துக்கு பிறகு தமிழில் அதிக வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் தெலுங்கு மற்றும்  இந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இப்போது சல்மான் கானுடன் ’கிசி கா பாய் கிசி கா ஜான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர், பூஜா ஹெக்டேவுக்கு 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசுக் காரை வாங்கிக் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின. இதற்கு விளக்கமளித்துள்ள பூஜா, “அந்த செய்தியின் ஸ்க்ரீன்ஷாட்டை தயாரிப்பாளருக்கு அனுப்பி, எப்போது எனக்கு கார் வாங்கித் தர போகிறீர்கள் எனக் கேட்டுள்ளேன்” என ஜாலியாக பதிலளித்துள்ளார்.