வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 11 ஜூலை 2023 (13:06 IST)

விஜய் பட நடிகையுடன் செல்ஃபி....செல்போனை பறித்த நபரால் பரபரப்பு

RASHMIKA MANDANA
நடிகை ராஷ்மிகாவின் செல்போனை ரசிகர் ஒருவர் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர், கார்த்தியுடன் சுல்தான், விஜய்யுடன் வாரிசு, அல்லு அர்ஜூனுடன் புஷ்பா 1 ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது புஷ்பா -2 படத்தில் நடித்து வருவதுடன் இந்திப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர்  ரன்பீர் கபீருடன் இணைந்து நடித்துள்ள அனிமல் படம் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில், விளம்பர படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக  நேற்ற்  நடிகை ராஷ்மிகா மும்பை சென்றிருந்தார்.

ஷூட்டிங் பகுதியில், தன் கேரவனில் இருந்து வெளியே வந்த அவர் ரசிகர்களை நோக்கி கையை அசைத்தார். அதன்பின்னர், கேரவனுக்கு வெளியே  குவிந்திருந்த ரசிகர்களுடன் உரையாடி, அவர்களுடன்  புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அப்போது, ராஷ்மிகாவின் பாதுகாப்பிற்காக அவரது பாதுகாவலர்கள் நின்றிருந்தனர்.  அவர் ஒவ்வொரு ரசிகருடனும் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ஒரு ரசிகருடன் செல்பி எடுக்கும்போது, அவரது கையில் செல்போனை கையில் பிடித்துக் கொண்டார். ஆனால், அந்த ரசிகர் திடீரென்று தன் செல்போனை பறித்துக் கொண்டார்.

இதனால், அங்கு சிறிது  நேரம் பரபர்ப்பு ஏற்பட்டது.  இதனைத்தொடர்ந்து ராஷ்மிகா அடுத்த நபருடன் செல்பி எடுக்கத் தயாரானார்.