1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 26 நவம்பர் 2021 (18:31 IST)

ஜிவி பிரகாஷின் ‘ஜெயில்’ படத்திற்கு தடை கோரி வழக்கு!

ஜிவி பிரகாஷ் நடித்த ‘ஜெயில்’ என்ற திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு ரிலீசுக்கு தயாராகி விட்டது என்பதும் அதன் பின் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ஒரு சில பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் டிசம்பர் 9ஆம் தேதி இந்தப் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இரிந்த நிலையில் தற்போது திடீரென இந்த படத்தின் ரிலீஸுக்கு தடை கேட்டு ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வழக்கு தொடர்ந்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை முதலில் ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்திடம் தயாரிப்பாளரிடம் கொடுத்ததாகவும் தற்போது திடீரென வேறு நிறுவனத்திற்கு மாற்றிவிட்டதால் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் நீதிமன்றம் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் மனுவுக்கு பதிலளிக்க ‘ஜெயில்’ பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் திட்டமிட்டபடி டிசம்பர் 9ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆகுமா என்ற? எழுந்துள்ளது