1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 10 ஏப்ரல் 2025 (11:58 IST)

பாலிவுட் ஒரிஜினல் கதைகளில் கவனம் செலுத்த வேண்டும்… ரீமேக் வொர்க் அவுட் ஆகாது- ராஷி கன்னா ஓபன் டாக்!

பாலிவுட் நடிகையான ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்தடுத்து திருச்சிற்றம்பலம், அரண்மனை 5, சர்தார் மற்றும் அகத்தியா ஆகிய படங்களில் தோன்றிய அவர், தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார்.

அதே போல பாலிவுட்டில் விஜய் சேதுபதி மற்றும் ஷாகித் கபூர் ஆகியோருடன் இணைந்து பார்ஸி வெப் சீரிஸில் நடித்திருந்தார். இந்த சீரிஸின் வெற்றியால் அவர் இந்தியா முழுவதும் அறிந்த நடிகையானார்.  தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட் படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ராஷி கன்னா பாலிவுட் ரீமேக் கதைகளை தவிர்த்து ஒரிஜினல் கதைகளைப் படமாக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இது பற்றி பேசியுள்ள அவர் “தென்னிந்திய படங்கள் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவது இப்போதும் நடக்கிறது. ஆனால் ஒரிஜினல் படங்கள் இணையத்திலேயே பார்க்கக் கிடைப்பதால் பெரிய வெற்றிப் பெற முடியாது. ஏனென்றால் கொரோனாவுக்குப் பிறகு ரசிகர்களுக்கு மொழி ஒரு பிரச்சனையாக இல்லை. அதனால் பாலிவுட் ஒரிஜினல் கதைகளில் கவனம் செலுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.