1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 29 நவம்பர் 2021 (11:19 IST)

ஜெயில் படத்துக்கு எத்தனை பிரச்சனைதான் வரும்… இயக்குனர் வசந்தபாலனின் முகநூல் பதிவு!

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடித்துள்ள ஜெயில் திரைப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ் நடித்த ‘ஜெயில்’ என்ற திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு ரிலீசுக்கு தயாராகி விட்டது என்பதும் அதன் பின் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ஒரு சில பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டிசம்பர் 9ஆம் தேதி இந்தப் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இரிந்த நிலையில் தற்போது திடீரென இந்த படத்தின் ரிலீஸுக்கு தடை கேட்டு ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வழக்கு தொடர்ந்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை முதலில் ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்திடம் தயாரிப்பாளரிடம் கொடுத்ததாகவும் தற்போது திடீரென வேறு நிறுவனத்திற்கு மாற்றிவிட்டதால் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் நீதிமன்றம் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் மனுவுக்கு பதிலளிக்க ‘ஜெயில்’ பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் திட்டமிட்டபடி டிசம்பர் 9ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆகுமா என்ற? எழுந்தது.

இந்நிலையில் இதுபற்றி இயக்குனர் வசந்தபாலன் விளக்கம் அளிக்கும் விதமாக தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் ‘சென்ற வாரம் வலைப்பேச்சு நிகழ்ச்சியில் ஜெயில் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது என்று வெளிவந்ததை ஒட்டி திரையுலகைச் சேர்ந்த பல பிரபல நண்பர்கள் என்னிடம் இந்த ஜெயில் படத்துக்கு எத்தனை பிரச்சினை தான் வரும் என்று தங்களின் வருத்தங்களைத் தெரிவித்தார்கள். விரைவில் தீர்வு காணப்படவேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு ஜெயில் தயாரிப்பாளர் ஸ்ரீதரன் அவர்களுக்கும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா அவர்களுக்குமிடையே ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டு விட்டது.ஆகவே தடைகள் முழுமையாக நீங்கி டிசம்பர் 9 ம் தேதி திரையரங்குகளில் ஜெயில் வெளியாகும். வலைப் பேச்சு நிகழ்ச்சியிலும் இந்த தகவலை அறிவித்தால் மகிழ்ச்சியடைவேன்.’ எனக் கூறியுள்ளார்.