ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 11 அக்டோபர் 2018 (19:50 IST)

'சீதக்காதி' குறித்து விஜய்சேதுபதியின் முக்கிய அறிவிப்பு

விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'செக்க சிவந்த வானம்' மற்றும் '96;' ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது அவர் நடித்து வரும் படங்களில் ஒன்று 'சீதக்காதி'. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை விஜய்சேதுபதி அறிவித்துள்ளார்.

'சீதக்காதி' படத்தின் சிங்கிள் பாடல் அக்டோபர் 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது விஜய்சேதுபதி ரசிகர்களுக்கான ஆயுதபூஜை விருந்து என்று எடுத்து கொள்ளலாம்.

முதல்முறையாக பலமணி நேரம் மேக்கப் போட்டு வயதான கேரக்டரில் நடித்துள்ள விஜய்சேதுபதிக்கு இந்த படம் மேலும் மகுடம் சூட்டும் என்று எதிர்பார்க்கலாம். இந்த படத்தில் அர்ச்சனா, ரம்யா நம்பீசன், காயத்ரி, பார்வதி நாயர் என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் மகேந்திரன், மெளலி, பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

'96' படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார் என்பதும்,  'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' இயக்குனர் பாலாஜி தரணிதரன் இந்த படத்தை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது