1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2022 (19:07 IST)

இளையராஜாவை சிறுமைப்படுத்த வேண்டாம்: சீனுராமசாமி

Seenuramasamy
இசைஞானி இளையராஜா அவர்களை சிறுமை செய்யத் துணிவது வருத்தம் அளிக்கிறது என்று இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் 
 
சமீபத்தில் மாமனிதன் படத்தின் பத்திரிக்கையாளர் கூட்டத்தின்போது இளையராஜா தன்னிடம் பேசவில்லை என்றும் தான் என்ன தவறு செய்தேன் என்றும் வருத்தத்துடன் இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்து இருந்தார். 
 
இதனை அடுத்து இளையராஜாவுக்கு நெட்டிசன்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சீனுராமசமை, இளையராஜாவை சிறுமைப்படுத்த துணிவது வருத்தம் அளிக்கிறது என்று தனது டுவிட்டரில் கூறியுள்ளார் அவர் இது குறித்து கூறியிருப்பதாவது: 
 
இசைஞானியிடம் எனது 
அன்பை உணர்த்த 
வழியறியாத 
நான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதை உரைத்தேன்.
 
அதை பயன்படுத்தி 
சிலர் அவரை சிறுமை செய்யத்துணிவது மேலும் வருத்தமளிக்கிறது,
அது என் நோக்கத்திற்கு எதிரானது.
 
ஜூன்24 வெளிவரும் 
#மாமனிதன்
அவரது புகழ் பாடும்
அவர் மீதான என்
அன்பை பேசும்