செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2022 (08:38 IST)

இளையராஜா கச்சேரியில் பாடும் வடிவேலு…. வெளியிட்ட சூப்பர் வீடியோ!

இளையராஜா இசைக்கசேரி விரைவில் மதுரையில் நடக்க உள்ள நிலையில் அதில் வைகைப்புயல் வடிவேலு கலந்துகொள்ள உள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் சாதனைகள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை. கிட்டத்தட்ட 1400 படங்களுக்கு மேல் 6000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா இப்போதும் விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

படங்களில் பிஸியாக இருந்தாலும், இளையராஜா தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் பல கச்சேரிகளை வரிசையாக நடத்தி வருகிறார். அந்த வகையில் வரும் ஜூன் 26 ஆம் தேதி மதுரையில் ‘இசையென்றால் இளையராஜா’ என்ற கச்சேரியை நடத்துகிறார். இந்த கச்சேரியில் கலந்துகொண்டு வடிவேலு இளையராஜா தான் பாடிய சில பாடல்களை பாட உள்ளதாக அறிவித்துள்ளார். இது சம்மந்தமான வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.