1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 17 ஜூன் 2022 (17:22 IST)

நல்ல படம்னு நினச்சு அதிகமா அடி வாங்குறேன்..! – விஜய் சேதுபதி வருத்தம்!

தமிழின் பிரபலமான நடிகராக உள்ள விஜய் சேதுபதி, நல்ல படங்கள் சிலவற்றை வெளியிடும்போது நஷ்டமடைவதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக உள்ளவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக தனியாக படங்கள் நடிக்கும் அதேசமயம் விஜய், கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவும் நடித்து ஸ்கோர் செய்து வருகிறார் விஜய் சேதுபதி.

இந்நிலையில் அடுத்த வாரம் இவர் நடித்துள்ள “மாமனிதன்” படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி “எல்லாமே கணக்கு போட்டு என்னால் செய்ய முடியவில்லை. சில நல்ல படங்களை, கதாப்பாத்திரங்களை இழந்துவிடுவேனோ என்ற பயம் இருக்கிறது. நல்ல படம் என நினைத்து சின்னதாக வெளியிடும்போது அதிகமாக அடிதான் வாங்குகிறேன். ஆனாலும், அந்த ஏக்கமும் ஆசையும் இருக்கிறது” என பேசியுள்ளார்.