1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 28 டிசம்பர் 2021 (09:52 IST)

டப்பிங் படங்களை விட தமிழ் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும்… சீனு ராமசாமி!

இயக்குனர் சீனுராமசாமி மாற்று மொழிப்படங்களின் ரிலீஸை தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.

இப்போது தமிழ் படங்களுக்கு இணையான எண்ணிக்கையில் மாற்று மொழிப் படங்களும் தமிழகத்தில் ரிலீஸாக ஆரம்பித்துள்ளன. சமீபத்தில் ரிலிஸான புஷ்பா திரைப்படம் கிட்டத்தட்ட தமிழ் படங்களுக்கு இணையான திரையரங்கை ஆக்கிரமித்தது. அதே போல அடுத்தடுத்து வரும் ஆர் ஆர் ஆர் மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய படங்களுக்கும் பெரிய அளவில் திரையரங்குகள் ஒதுக்கப்பட உள்ளன. இது மட்டுமல்லாமல் ஹாலிவுட் படங்களும் மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் ரிலிஸ் ஆகின்றன.

இதனால் சிறு மற்றும் குறு பட்ஜெட் தமிழ்ப் படங்களுக்கு போதுமான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இதுபற்றி பேசியுள்ள இயக்குனர் சீனு ராமசாமி ‘கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அந்த மொழிப் படங்களுக்கே முன்னுரிமைக் கொடுக்கின்றனர். அதுபோல தமிழ்நாட்டிலும் தமிழ் படங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். டப்பிங் மற்றும் ஹாலிவுட் படங்களுக்கான திரையிடல் அட்டவணையை தயாரிப்பாளர் சங்கம் உருவாக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.