1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 18 டிசம்பர் 2021 (09:56 IST)

சில வருட இடைவெளிக்குப் பின் தமிழ் சினிமாவில் மாதவன்… இயக்குனர் இவர்தான்!

மாதவன் விக்ரம் வேதா படத்துக்குப் பின் தமிழில் அதிகமாக படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக இயக்குனர் மணிரத்னத்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர் மாதவன். அதன் பின் அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட் அடிக்க ஆரம்பித்த நிலையில் தமிழ் சினிமாவில் ஒரு சுற்று வந்தார். ஆனால் 2010 க்குப் பிறகு அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

அதன் பின்னர் தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் தேர்வு செய்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இறுதிச் சுற்று, விக்ரம் வேதா ஆகிய படங்கள் கவனத்தைப் பெற்றாலும் அடுத்தடுத்து அவர் படங்களில் நடிக்கவில்லை. இதையடுத்து இப்போது அவர் ஈரம் அறிவழகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.